ஸ்ரேயாஸ் அய்யருக்கு ஐபிஎல் நிர்வாகம் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று(29-09-) நடந்த லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதியது.

இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த போட்டியில் ஒதுக்கப்பட்ட நேரத்தை விட டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீசின. டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு மெதுவாக பந்தை வீசியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் டெல்லி அணி செய்த முதல் தவறு என்பதால் கேப்டனுக்கு ரூ .12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.