வெளியேற்றப்பட்டார் நான்காவது போட்டியாளர், கமலுடன் கடும் வாக்குவாதம்!!!

பிக் பாஸ் வீட்டின் 4-வது எவிக்ஷன் இன்று நடைபெற உள்ளது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியியல் 16 போட்டியாளர்களில் ஒருவரான மீரா மிதுன் வெளியேற்றப்பட்டு விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

பொதுவாக சாக்ஷி அகர்வால் தான் மிகவும் குறைவான ஓட்டுகளை பெற்றிருந்தார். ஆனால் சேரன் மீது மீரா மிதுன் அபாண்டமாக பழி சுமத்தியது மக்கள் மத்தியில் மேலும் வெறுப்பை பெற்று கொடுத்தது.

இதனால் ஓட்டுகளில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு இறுதியில் மீரா மிதுன் வெளியேற்றப்பட்டு விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன, மேலும் வெளியேறும் போது கமலுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.