விண்வெளிக்கு லிஃப்ட்

சமீபத்தில் இந்தியாவிற்கு “உயரமான சிலைகள்” மீதான போதை உருவாகி இருப்பதை நையாண்டியாக தெரிவிக்கும் நோக்கில் மார்க்கண்டேய கட்ஜூ அவர்கள், சமூக வலைததளத்தில் ஒரு கருத்தை தெரிவித்து. அதில் போகும் போக்கை பார்த்தால் விண்வெளிக்கி செல்ல ராக்கெட்டுகள் தேவைப்படாது, சிலைகள் போதும் என்பது போல் கூறி இருந்தார். அது ஜப்பான் நாட்டு ஆராய்ச்சியாளர்களின் காதில் விழுந்தது போல ஒரு சோதனை நிகழ்வுள்ளது. ஜப்பான் நாட்டில் உள்ள ஷிசோக்கா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரர் ஏஜென்சி (JAXA) உடன் இணைந்து “ஒரு நம்பமுடியாத” திட்டத்தின் கீழ் பணியாற்றுகிறது. அது வரவிருக்கும் வாரத்தில் ஒரு மினியேச்சர் பதிப்பு ஸ்பேஸ் லிஃப்ட்டர்களின், அதாவது விண்வெளியை நோக்கி செல்லும் லிஃப்ட் சோதனைகளைத் தொடங்குகிறது. இது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையான நாசாவிற்கே வாராத யோசனை ஆச்சே என்று நினைக்கிறீர்கள் தானே? இருக்கலாம்! முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.! விண்வெளி எலிவேட்டர் இதுவரை நடத்தப்பட்ட சோதனைகள் ஆனது குறைந்த தூரத்தில் உள்ள மற்றும் எளிமையான நட்சத்திரங்களை அடையும் நோக்கத்திலான சிறிய சிறிய படிகளை செயல்படுத்தியது. இந்த விண்வெளி எலிவேட்டர் ஆனது 6 செ.மீ உயரம், 3 செ.மீ நீளம், மற்றும் 3 செ.மீ அகலம் கொண்ட ஒரு சிறிய பெட்டியைக் கொண்டிருக்கும். இரண்டு சிறிய க்யூப்சாட்ஸ்க்கு (CubeSats) இடையேயான இடைவெளியில் இடைநிறுத்தப்பட்ட ஒரு 10 மீட்டர் கேபிள் வழியாக இந்த பெட்டி நகரும். பெட்டியின் இயக்கம் செயற்கைக்கோள் வழியாக கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். 

Leave a Reply

Your email address will not be published.