விஜய்யின் பிரம்மாண்ட சாதனையை அசால்ட்டாக முறியடித்த தல!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் முதல் சிங்கிள் டிராக் சிங்கப்பெண்ணே கடந்த 23ம் தேதி வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்னதாக சமூக வலைதளங்களில் லீக்கானது.

எனினும், இந்தப் பாடலை வெளியான 24 மணிநேரத்தில் யூடியூப்பில் 40 லட்சம் பேர் பார்த்தனர். தற்போது வரை இந்த பாடலை யூடியூப்பில் 68 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 6.91 லட்சம் பேர் லைக்ஸூம், 39 ஆயிரம் பேர் டிஸ்லைக்ஸூம் கொடுத்துள்ளனர்.

இதற்கு அடுத்த நாள் வெளியான அஜித்தின் பிங்க் ரீமேக் படமான நேர்கொண்ட பார்வை படத்தின் அகலாதே பாடலை 24 மணிநேரத்தில் 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதன் மூலம், படம் வெளியாவதற்கு முன்னதாகவே விஜய்யின் சாதனையை தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை முறியடித்துள்ளது.

தற்போது வரை அகலாதே பாடலை யூடியூப்பில், 66 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும், 2.48 லட்சம் பேர் லைக்ஸ் கொடுத்துள்ளனர். 16 ஆயிரம் பேர் டிஸ்லைக்ஸ் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.