வர்ஷா நடிக்கும் தெலுங்கு படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது.

வர்ஷா போலம்மா தமிழில் 96 மற்றும் பிகில் படத்தில் நடித்திருந்தார் .96 படத்தில் விஜய் சேதுபதியின் புகைப்பட மாணவியாக நடித்திருப்பார் ,அந்த படத்தில் சிறிய காட்சிகளில் வர்ஷா வந்து சென்றிருந்தாலும் ,ரசிகர்கள் இடையே யார் அந்த ‘கீயூட் கேர்ள்’ என்று இனையத்தில் தேட வைத்திருந்தார் ,இவர் நடிகை நஸ்ரியா போல் இருப்பதாக பலர் கூற படத்தில் நடிப்பதற்கு முன் இனையத்தில் நஸ்ரியாவின் பல வசனங்களை பேசி டப்மாஸ் செய்து இருக்கிறார் . அதற்கு பிறகு பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருந்தார் ,அந்த படத்திலும் சிரிய கதாபாத்திரம் என்றாலும் வரும் காட்சிகளில் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து இருந்தார் . பிகில் படத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஜெராப்,விவேக்,யோகிபாபு, டேனியல் பாலாஜி போன்ற பலரும் நடித்திருந்தனர்.படத்தை இயக்கி இருந்தார் அட்லி . படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தனர் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனம்.

தற்போது வர்ஷா போலம்மா தெழுங்கு படம் ஒன்றில் நடித்திருக்கிறார்.’சூசி சூதாங்கானே ‘ என்ற படத்தில் தான் நடித்திருக்கிறார் வர்ஷா ,இந்த படத்தில் கதநாயகனாக அறிமுகம் ஆகிறார் சிவா கன்டுகுரி .இவர் பிரபல தயாரிப்பாளரான ராஜ் கன்டுகுரியின் மகன் . இந்த படம் ஒரு ரொமான்டிக் காதல் படமாக தயாரிக்க பட்டு வருகிறது.

தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாக போகிறது. இந்த தகவலை தனது டீவிட்டர் பக்கத்தில் ஒரு போஸ்டருடன் பதிவேற்றியுள்ளார் .இந்த படத்தின் டீசர் நவம்பர் 6அன்று காலை 11.11 மணியளவில் வெளியாக உள்ளது என்ற தகவலை வெளியிட்டுள்ளார் வர்ஷா.