யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம்!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்கள் பலர் ஹீரோ அவதாரம் எடுத்து வரும் நிலையில் யோகிபாபுவும் தற்போது ஹீரோவாக ஒருசில படங்களில் நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடித்து வரும் ‘ஜாம்பி’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்த நிலையில் லைகா. இந்நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் யோகிபாபு ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ”பன்னிக்குட்டி ” என்னும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை அனுசரண் முருகையா இயக்குகிறார்.

கருணாகரன் , யோகிபாபு , சிங்கம் புலி , திண்டுக்கல் லியோனி , T.P கஜேந்திரன் , லக்ஷ்மி ப்ரியா , ராமர் , ‘பழைய ஜோக்’ தங்கதுரை உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ‘K’ என்கிற கிருஷ்ணகுமார் இசையமைக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ஆண்டவன் கட்டளை , 49-0 , கிருமி ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

சதிஷ் முருகன் ஒளிப்பதிவில் N .R சுகுமாரன் கலை இயக்கத்தில் , M.அனுசரண் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.