மெகா ஹிட் கொடுத்த இயக்குனருடன் கைக்கோர்க்கும் தனுஷ்!!!

தனுஷ் தமிழ் சினிமாவில் பல தரமான படைப்புக்களை கொடுத்தவர். தற்போது கூட வெற்றிமாறன், மாரிசெல்வராஜ், ராட்சசன் இயக்குனர் ஆகியோருடன் பணியாற்றி வருகின்றார்.

இதை தொடர்ந்து தனுஷ் சமீபத்தில் பேட்ட என்ற மெகா ஹிட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை ரிலேயன்ஸ் மற்றும் Ynot ஆகிய இரண்டு நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றது.

இப்படம் பாதி வெளிநாட்டில் நடக்க, அதோடு ஒரு ஹாலிவுட் நடிகரும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.