மாற்றுத்திறனாளி இளைஞனின் கனவை நனவாக்கிய விஜய் மற்றும் அனிருத்

மாற்றுத்திறனாளி இளைஞனின் கனவை நனவாக்கிய நடிகர் விஜய் மற்றும் அனிருத்துக்கு நடிகர் லொரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி கூறி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அவரது மாற்றுத்திறனாளிகள் க்ரூப்பில் இருக்கும் டான்சன் என்பவர், விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலை வாசித்துள்ளார்.

மேலும் விஜய்க்கு முன் வாசிக்கவும், அனிருத்தின் இசையில் வாசிக்கவும் அவர் விரும்பியுள்ளார்.

இதையடுத்து லொரன்ஸ் அவரின் வீடியோ பதிவை விஜய் மற்றும் அனிருத்துக்கு அனுப்பியுள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த விஜய், லொரன்ஸிடம், லாக்டவுன் முடிந்த பிறகு அவரை என் முன் வாசிக்க நேரில் அழைத்து வாருங்கள் கூறியுள்ளார்.

மேலும் அனிருத் தனது இசையில் அவரை வாசிக்க வைக்கவுள்ளதாக கூறியுள்ளார். விஜய் மற்றும் அனிருத்தின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக லொரன்ஸ் தெரிவித்துள்ளார்.