மருத்துவரைத் திருமணம் செய்துள்ளார் இயக்குநர் விஜய்.

சமீபத்தில் தனது திருமணம் குறித்து அறிக்கை வெளியிட்ட விஜய், நேற்று நடைபெற்ற திருமணத்தில் மருத்துவர் ஐஸ்வர்யாவை மணந்துள்ளார். இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டும் கலந்துகொண்டார்கள். இது இயக்குநர் விஜய்யின் 2-வது திருமணம் ஆகும். 2014-ல் நடிகை அமலா பாலை இயக்குநர் விஜய் திருமண செய்த நிலையில் இருவரும் 2017-ல் விவகாரத்து செய்துகொண்டார்கள்.

இந்த வருடம் வாட்ச்மேன், தேவி 2 என விஜய் இயக்கிய இரு படங்கள் வெளியாகியுள்ளன. அடுத்ததாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை விஜய் இயக்கவுள்ளார். ஜெயலலிதா வேடத்தில் கங்கனா நடிக்கவுள்ளார்.