படு மோசமான நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி….. ! உடனடியாக வரப் போகும் பாரிய மாற்றங்கள்…!!புதிய கப்டன் யார்…?

இலங்கை கிரிக்கட் அணியில் பிரச்சினைகள் தொடர்ந்துக்கொண்டிருக்கின்றன.இந்தநிலையில், இலங்கை அணி தென்னாபிரிக்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளும் முன்னர் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனடிப்படையில் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க, அணித்தலைவர் தினேஸ் சந்திமல் உட்பட்ட பலர் அணியில் இருந்து நீக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவுக்கு நெருக்கமான தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன.

ஹத்துருசிங்கவுக்கு வருடாந்த சம்பளமாக 90 மில்லியன் ரூபாய்கள் 2018ஆம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளன.எனினும், அவரின் பயிற்றுவிப்பின்கீழ் இலங்கை கிரிக்கட் அணி தாழ்ந்த பெறுபேற்றை பெற்றுள்ளது.எனவே, ஹத்துருசிங்கவின் உடன்படிக்கையை ரத்துச்செய்வதற்கு சட்டமா அதிபரின் உதவிக்கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

விளையாட்டுத்துறை அமைச்சரின் வேண்டுகோளின் அடிப்படையில் நாங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இந்த ஆலோசனையை கோரியுள்ளோம் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், தென்னாபிரிக்க தொடரிற்கு முன்னதாக ஹதுருசிங்க வெளியேற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன

இதேபோன்று அணித்தலைவர் பதவியிலிருந்து தினேஸ் சந்திமல் நீக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளனஅவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்துள்ள இலங்கை அணி தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அணியின் தலைமைப்பதவியிலிருந்து தினேஸ் சந்திமல் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அணியின் புதிய தலைவராக திமுத் கருணாரட்ன நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளனஇலங்கை அணியின் தலைவர் தினேஸ் சந்திமலின் துடு;ப்பாட்டமும் மோசமாகவுள்ள நிலையிலேயே அவரை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அணியில் தற்போது இடம்பெற்றுள்ள பல வீரர்களை அவர்கள் மீண்டும் சிறந்த நிலைக்கு திரும்பும்வரை அணியிலிருந்து நீக்கிவிட்டு, இலங்கை ஏ அணியில் சிறப்பாக விளையாடிவரும் வீரர்களிற்கு வாய்ப்பை வழங்குவது குறித்து ஆராயப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இலங்கை அணிக்குள் பல பிரச்சினைகள் உள்ளன.அணிக்குள் மோதல் காணப்படுகின்றது அணி வீரர்கள் தனித்தனி துருவங்களாக பிரிந்து செயற்படுகின்றனர் என இலங்கை கிரிக்கெட்டுடன் தொடர்புபட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இலங்கை அணி வீரர்கள் பல குழுக்களாக பிரிந்து செயற்படுகின்றனர் சில வீரர்கள் மற்றவர்களுடன் பேசுவதுகூட இல்லை எனவும், அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.2019 உலக கிண்ணப்போட்டிகள் குறித்த நம்பிக்கையை நாங்கள் ஏற்கனவே கைவிட்டுவிட்டோம்.

முதல்சுற்றில் வெற்றிபெற்று அடுத்த சுற்றிற்கு செல்வோம் என எதிர்பார்ப்பது கூட அர்த்தமற்ற விடயம் என தெரிவித்துள்ள பேச்சாளர் ஒருவர், இதன் காரணமாக உலக கிண்ணப்போட்டிகள் வரை காத்திருப்பதில் அர்த்தமில்லை, இலங்கை கிரிக்கெட்டிற்கு உடனடி சிகிச்சை தேவைப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.