நெடுந்தீவு மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் கலைப்பிரிவில் சாதனை

நெடுந்தீவு மகாவித்தியாலயத்தினை சேர்ந்த மாணவன் யேசுதாசன் கிறிஸ்துராஜன் 3A சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கலைப்பிரிவில் 3A சித்திகளைப் பெற்றுள்ளதுடன், மாவட்ட நிலையில் 03வது இடத்தினையும் பெற்று கொண்டுள்ளார்.

இதேவேளை, தேசிய ரீதியில் 288வது இடத்தினையும் பெற்று யேசுதாசன் கிறிஸ்துராஜன் நெடுந்தீவு மண்ணுக்கும், பாடசாலைக்கும் பெருமை தேடித்தந்த மாணவனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Source> DelftMedia DM