தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி – டாப் 10 ரேங்கில் அஜித்.

டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட அஜித், இரண்டு பிரிவுகளில் முதல் பத்து இடங்களுக்குள் வந்து சாதனை படைத்துள்ளார். நடிகர் என்பதையும் தாண்டி ஏரோ மாடலிங், போட்டோகிராஃபி, கார் ரேஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தன்னுடைய திறனை வளர்த்துக் கொண்டு சாதனை படைத்து வருபவர் அஜித்.

அந்த வகையில் தற்போது துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் கவனம் செலுத்து வருகிறார். சமீபத்தில் கோவையில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சென்னை ரைஃபிள் கிளப் சார்பாக கலந்து கொண்ட அஜித், 5 சுற்றுகளில் 400 பாயின்ட்களுக்கு 314 பாயின்ட்களைப் பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இதையடுத்து டெல்லியில் உள்ள டாக்டர் கர்னி சிங் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்துக் கொண்ட அஜித், தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்து கொண்டார். டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் 3 பிரிவுகளில் கலந்து கொண்ட அஜித்,

ஃபிரீ பிஸ்டல் பிரிவில் 8-வது இடத்தையும்,

ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் பிரிவில் 9-வது இடத்தையும் பிடித்துள்ளார்.

ஸ்டாண்டர்ட் பிஸ்டல் பிரிவில் 12-வது இடம் அஜித்துக்கு கிடைத்துள்ளது.