தரம் 5 பரீட்­சைக்­குப் பதி­லாக – 8 ஆம் தரத்­தில் பரீட்சை.

5 ஆம் ஆண்டு புல­மைப் பரி­சில் பரீட்­சைக்­குப் பதி­லாக 7 அல்­லது 8ஆம் ஆண்­டில் பரீட்சை ஒன்றை நடத்த எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அந்­தப் பெறு­பே­று­க­ளுக்­க­மை­வாக மாண­வர்­க­ளின் திற­மை­க­ளுக்­கேற்ப ஒவ்­வொரு பாட பிரி­வு­க­ளுக்­கும் மாண­வர்­களை நெறிப்­ப­டுத்­தும் வகை­யில் கல்­வி­யி­ய­லா­ளர்­க­ளின் வழி­காட்­ட­லில் அந்­தப் புதிய திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இவ்­வாறு அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தார்.
கொட­கம சுபா­ரதி மகா மாத்ய வித்­தி­யா­ல­யத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற நிகழ்­வில் உரை­யாற்­றும்­போது அவர் இவ்­வாறு தெரி­வித்­தார் என்று அர­ச­த­லை­வர் ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­தது.
அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­ வது:

புல­மைப்­ப­ரி­சில் பரீட்­சையை இரத்­துச் செய்­வ­தன் ஊடாக உல­கின் வளர்ச்­சி­ய­டைந்த நாடு­க­ளில் பின்­பற்­றப்­ப­டும் கல்வி முறை­க­ளுக்கு ஏற்­ற­வ­கை­யில் எமது நாட்­டின் கல்­வித்­து­றை­யி­லும் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வோம்.

மருத்­து­வர்­கள், பொறி­யி­ய­லா­ளர்­கள், கணி­த­வி­ய­லா­ளர்­கள், விவ­சாய நிபு­ணர்­கள், தொழி­நுட்ப நிபு­ணர்­கள் உள்­ளிட்ட துறை­கள் வரை பிள்­ளை­கள் உயர்­கல்­வி­யைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான வாய்ப்பு இத­னூ­டா­கக் கிடைக்­கும்.

புல­மைப்­ப­ரி­சில் தொடர்­பில் கல்வி, விஞ்­ஞான ரீதி­யில் சிக்­கல் நிலை காணப்­ப­டு­கி­றது. கல்­வி­யைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு வச­தி­யற்ற மிக வறிய குடும்­பங்­க­ளின் பிள்­ளை­கள், அரச பாட­சாலை உள்­ளிட்ட தரப்­புக்­குக் கொடுப்­ப­னவு வழங்கி, மாண­வர்­க­ளுக்­குச் சிறந்த கல்­வியை வழங்­கும் நோக்­கு­டன் ஆரம்­ப­மான புல­மைப்­ப­ரி­சில் பரீட்சை இன்று பிர­பல பாட­சா­லை­க­ளி­லும் ஜன­ரஞ்­ச­க­மான பாட­சா­லை­க­ளில் பிள்­ளை­களை அனு­ம­திப்­ப­தற்­கான ஒரே­யொரு தடைத்­தி­ற­னாக மாறி­யுள்­ளது.

கல்­வித்­து­றை­யில் பல்­வேறு சிக்­கல்­கள் ஏற்­பட்­டுள்­ளன. பல்­க­லைக்­க­ழக அனு­ம­தி­யைப் பெற்­றுக்­கொள்­ளும் மாண­வர்­க­ளுள் 86 சத­வீ­தத்­தி­னர் புல­மைப்­ப­ரி­சில் பரீட்­சை­யில் சித்­தி­ய­டை­யா­த­வர்­கள் என்று புள்ளி விவ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன. தற்­போ­தைய கல்வி முறை­ யில் மாற்­றம் ஏற்­ப­டுத்த வேண்­டும் என்­றார்.