டிஆர்பிகாக செய்கிறார்களா? முதல் முறையாக பேட்டி கொடுத்த பிக்பாஸ் மதுமிதா!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. முக்கிய போட்டியாளராக இருந்த நடிகை மதுமிதா தன்னுடைய கையை அறுத்துக்கொண்டதால் அவரை உடனே வெளியேற்றினர்.

இந்நிலையில் நடிகை மதுமிதா இது பற்றி பிரஸ் மீட் வைத்து இந்த சர்ச்சை பற்றி விளக்கம் கொடுத்துள்ளார். “நேற்று என் மீது போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது என அறிந்து என்னுடைய வழக்கறிஞரை கிண்டி ஸ்டேஷன் அனுப்பி பார்க்க சொன்னேன். புகார் பதிவாகி இருப்பதை அவரும் உறுதி செய்தார். எனக்கு மீதம் தரவேண்டிய தொகையை ஒரு குறிப்பிட்ட தேதியில் தருவதாக உறுதி அளித்துள்ளார்கள். அதன் பிறகு ஏன் இப்படி பொய் புகார் அளித்தார்கள் என தெரியவில்லை. இதை கமல் சார் தான் சுமூகமாக தீர்த்து வைக்க வேண்டும்” என மதுமிதா பேசியுள்ளார்.