சூரிய கிரகணம் 2019

சந்திரன் பூமியையும்,. பூமி சூரியனை சுற்றுகின்றது. அப்படி சுற்றும் போது சூரியன்- பூமி இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும் போது சூரிய கிரகணம் என்ற நிகழ்வு ஏற்படுகின்றது.

குவியக் கூடிய நேரம், அதாவது சூரியன் – சந்திரன் – பூமி என மூன்றும் ஒரே நேர்கோட்டில் குவியக் கூடிய நிகழ்வாக நடக்கின்றது. இதனால் நாம் எதை செய்தாலும் அதற்கான பலன்கள் மிக அதிகமாக கிடைக்கும். இதன் காரணமாக தான் வீட்டில் இருந்த படியே இறை வழிபாடு செய்வதும், மந்திரங்களை ஜெபிப்பதும் நல்லது என கூறுகின்றனர்.

சூரிய கிரகணம் ஏற்படக் கூடிய நாள் மற்றும் நேரம்:
2019ஆம் ஆண்டின் கடைசி கிரகணமாக இந்த சூரிய கிரகணம் டிசம்பர் 26ம் தேதி நடக்க உள்ளது.
இந்த சூரிய கிரகணம் நடக்கக் கூடிய நாளில், நேரத்தில் ஒரே ராசியில் அதாவது தனுசு ராசியில் 6 கிரகங்களின் சஞ்சாரம் நடப்பதாக ஜோதிடர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சூரியன், புதன், சனி, கேது, குரு, சந்திரன் ஆகிய 6 கிரகங்கள் ஒரே இடத்தில் சஞ்சரிக்கின்றனர். இது ஒரு சாதாரண நிகழ்வு தான். அடிக்கடி இது போன்று பல கிரகங்கள் ஒரு ராசியில் இருப்பது சஞ்சரிப்பது வழக்கம் என தெரிவிக்கின்றனர்.

கிரகணம் ஏற்படக் கூடிய நேரம்:
இந்திய நேரப்படி கிரகணம் தொடங்கி, முடியும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளன. சில இடங்களில் முழு சூரிய கிரகணமும், சில இடங்களில் பகுதி சூரிய கிரகணம், சில இடங்களில் வளைய கிரகணமும் காண முடியும். ஒரே மாவட்டத்தில் சில இடங்களில் கிரகணத்தை சில விநாடிகளும், சில இடத்தில் சில நிமிடங்களும் காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சூரிய கிரகணம் 2019காணக்கூடிய நேரம்
சூரிய கிரகணம் தொடங்கும் நேரம்26 டிசம்பர், 07:59:53
முழு கிரகணம் தென்படும் நேரம்26 டிசம்பர், 09:04:33
சூரிய கிரகணம் உச்சம் பெறும் நேரம்26 டிசம்பர், 10:47:46
முழு கிரகண முடிவைக் காணக்கூடிய நேரம்26 டிசம்பர், 12:30:55
பகுதி கிரகண முடிவைக் காணக்கூடிய நேரம்26 டிசம்பர், 13:35:40

எப்படி பார்க்கலாம்?
சோலார் ஃபில்டர் அல்லது சூரிய வடிகட்டி எனும் சூரிய கிரகணத்தைப் பார்க்க கூடிய கண்ணாடியைப் பயன்படுத்தி சூரிய கிரகணத்தை கண்டு ரசிக்கலாம். இந்த கண்ணாடி சூரிய ஒளியில் ஒரு லட்சத்தில் ஒரு பதியை மட்டும் தான் அனுப்பும். அதில் சாதாரணமாக பார்த்தால் எதுவும் தெரியாது. ஆனால் சூரியனைப் பார்த்தால் சூரிய கிரகண நிகழ்வு நன்றாக தெரியும்.

சூரிய பிம்பத்தைத் திரையில் ஏற்படுத்துவது:
ஒரு பந்து போன்ற அமைப்பை உருவாக்கி அதில் ஒரு கண்ணாடி மூலம் சூரியனின் பிம்பத்தை திரையில் அல்லது சுவரில் விழ வைத்து அதில் கண்டு ரசிக்கலாம்.

சூரிய கிரகணத்தின் போது மர்ம கதிர்கள் வருவதில்லை. கிரகணம் தவறான நிகழ்வு அல்ல. அது ஒரு அற்புதமான நிகழ்வு. அதை கண்டு களிப்பது நல்லது.
இருப்பினும் எக்காரணம் கொண்டும் வெறும் கண்ணால் சூரிய கிரகணத்தைப் பார்ப்பது தவறு. அதனால் கண்களுக்கு ஆபத்தை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.