சீனாவின் வுஹான் நகரில் புதிதாக எந்தவொரு நோயாளியும் பதிவாகவில்லை

கடந்த 48 மணித்தியாலங்களில் சீனாவின் வுஹான் நகரில் புதிதாக எந்தவொரு நோயாளியும் பதிவாகவில்லை என சீன சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

சீனாவின் வுஹான் நகரிலேயே வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்திருந்தது.

கடந்த 48 மணித்தியாலங்களில் பீஜிங் உள்ளிட்ட சீனாவின் ஏனைய பகுதிகளில் 34 பேர் தொற்றுக்குள்ளானதாக பதிவாகியுள்ளது.

எனினும் அவர்கள் அனைவரும் வௌிநாடுகளுக்கு சென்று சீனாவுக்கு திரும்பியவர்கள் என அந்நாட்டு சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, மலேசியாவில் கொரோனா வைரஸ், சுனாமி போன்ற அலையை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே பொதுமக்கள் அரசாங்கம் விதித்துள்ள பொது நடமாட்ட கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

மலேசியாவில் ஒரேநாளில் மேலும் 117 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ​

Source > newsfirst.lk