கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்

மினுவங்கோடா மற்றும் திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.

திவுலப்பிட்டியில் 39 வயது பெண்ணுக்கு கோவிட் 19 வைரஸ் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெண் காய்ச்சல் காரணமாக கம்பாஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியபோது பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதற்கமைய 15 கம்பா மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் 40 தனியார் துறை ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.