ஊழியர்களை மகிழ்ச்சியடையச் செய்த சூரி

தன்னுடைய ஹொட்டலில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கியுள்ளார் நடிகர் சூரி.

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் சூரியும் ஒருவர்.

சொந்த ஊரான மதுரையில் நடிகர் சூரி ஹொட்டல் ஒன்றை நடத்தி வருகிறார், இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்த எங்களுக்கு பயம் கலந்த ஓய்வு கிடைத்துள்ளது.

இந்த நேரத்தை பயனுள்ளதாக செலவழிக்க என்னவெல்லாம் முடியுமோ அதை செய்து வருகிறேன்.

சமையலில் மனைவிக்கு உதவுகிறேன், குழந்தைகளை குளிப்பாட்டி சாப்பிட வைக்கிறேன்.

அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள், யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள்.

என்னுடைய ஹொட்டலில் பணிபுரியும் 350 பேருக்கும் முழு சம்பளத்தை கொடுத்துவிட்டேன்.

இதேபோன்று வறுமையில் வாடும் நாடக- நடிகைகளுக்கு ரூ.1 லட்சம் பணம் கொடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.