உயர் தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்

இம்முறை உயர் தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களின் தேசிய அடையாள அட்டையை தயாரிப்பதற்காக இந்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. ஆட்பதிவுத் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

இம்முறை தேசிய அடையாள அட்டையை தயாரிக்கும் போது புகைப்படங்களை பெற்றுக்கொள்ளல் ஒன்லைன் முறையில் இடம்பெறவுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.