இப்படியொரு அஜித்தை பார்த்திருக்க மாட்டீங்க – ஹெச். வினோத்

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைதொடர்ந்து இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

இது ஒருபக்கமிருக்க நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் நடிப்பு குறித்து பேசியிருக்கும் இயக்குநர் வினோத், “அஜித் இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் சிரமம் எடுத்து நடித்துள்ளார்.

இன்னும் சொல்லப்போனால் இப்படியொரு அஜித்தை இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது என்று என்னால் உறுதியாக சொல்லமுடியும்” என கூறியுள்ளார்.