இன்று பிக்பாஸ் வீட்டில் கதறி அழும் அனிதா

பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சி முன்று நாட்களுக்கு முன்பு தொடங்கி வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது. கொண்டாட்டங்களைத் தாண்டி நிறைய சிக்கல்கள் இருப்பதாகத் தெரிகிறது.

அனிதாவுக்கும் சுரேஷ் சக்ரவர்த்திக்கும் இடையிலான சண்டை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிகிறது. இன்றைய ப்ரோமோவில் அனிதா சம்பத் தனது வாழ்க்கை பயணத்தைப் பற்றி அழுகிறார்.

மேலும் நான் கடினமாக உழைத்து நல்ல பெயரைப் பெற்றேன் என்று அழுகிறார். வீட்டில் சிலர் அவரை ஆறுதல்படுத்துகிறார்கள் என்று தெரிகிறது.