இன்று இரவு 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம்

நாடளாவிய ரீதியில் இன்று இரவு 8 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களையும் அலவத்துகொடை, வரக்காபொல மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பொலிஸ் பிரிவுகளையும் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மீண்டும் இன்று 8 மணிக்கு பிறப்பிக்கப்படவுள்ளது.

இன்று இரவு 8 மணிக்கு பிறப்பிக்கப்படுகின்ற ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கே தளர்த்தப்படவுள்ளது.

Source > https://www.newsfirst.lk/tamil/2020/04/24/நாடளாவிய-ரீதியில்-இன்று-2/