அஜித் சார் இல்லைனா நான் இல்லை- பிரபல இயக்குனர் பெருமை

அஜித் இன்று சினிமாவில் எந்த புரமோஷனும் இல்லாமல் உச்சத்தில் இருக்கும் நடிகராக உள்ளார். அவரின் ரசிகர்களின் பலம் அப்படிப்பட்டது என்றே சொல்லலாம்.,

அவரின் பட வாய்ப்பு கிடைக்காதா என பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் காத்திருக்கிறார். அஜித்தை வைத்து கிரீடம் படத்தை எடுத்தவர் ஏ.எல்.விஜய்.

அவர் அண்மையில் பேட்டியளித்துள்ளார். இதில் நான் இன்று இந்த நிலைமையில் இருப்பதற்கு அஜித் சாரே காரணம். கிரீடம் படத்தில் அவர் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் நான் இன்னும் போராடும் இயக்குனராக தான் இருந்திருப்பேன்.

அல்லது இயக்குனராகாமலே இருந்திருக்கலாம். அவர் ஓகே சொன்னதால் தான் என்னுடை சினிமா பயணம் டேக் ஆஃப் ஆனது. அவருக்கு வாழ்க்கை முழுக்க நன்றிகடன் பட்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.